செய்திகள்

இலங்கை முதுகில் குத்திவிட்டது என்கிறது டைம்ஸ் ஓவ் இந்தியா

மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை இந்தியாவின் முதுகில் குத்திவிட்டதாக டைம்ஸ் ஓவ் இந்தியா தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஓவ் இந்தியா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

பெரிதும் எதிர்பாhக்கப்பட்ட இலங்கைக்கான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு முன்னதாக இலங்கை பிரதமர் பதட்டத்தை அதிகரித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சிக்கான பேட்டியின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு உரிமையுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தியா தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது இதுவே முதற்தடவை.

இலங்கை பிரதமரின் இந்த கருத்து இராஜதந்திர பதட்டத்தை உருவாக்கலாம், இந்தியா இந்த விடயத்தை அணுகப்போகின்றது என பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.