செய்திகள்

இலவச சட்ட உதவிகளை வழங்க முன்வந்த நாமல்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் அதற்கு பின்னரும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை இலவசமாக வழங்க ஐ.ம.சு.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.