செய்திகள்

இளம் பெண்கள் ராஜபக்ஸ புதல்வர்களினால் பாலியல் வல்லுறவு: விரைவில் விசாரணை என்கிறது ஹெல உறுமய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களான நாமல்,யோஹித மற்றும் ரோஹித ஆகியோர் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை , பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியமை உட்பட அவர்களின் பல்வேறு குற்றங்களை எதிர்வரும் சில மாதங்களுக்குள் விசாரித்து அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஹெல உறுமய தெரிவித்திருக்கிறது.

Namal-Yoshitha-Rohitha
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க, ராஜபக்ஸவின் மூத்த புதல்வரான நாமலின் ‘நீலப் படை ‘ நாட்டின் மாற்று படைப்பிரிவு போல செயற்பட்டதாக கூறினார். இந்த நீலப் படையினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் வாரங்களில் வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மூவரினாலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மற்றும் பாலியல் துஸ்பிரயோகத்துக் குட்படுத்தப்பட்ட பல இளம் பெண்களிடமிருந்து ஏராளமான ஆதாரங்களும் தகவல்களும் கிடைத்துள்ளதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு இவர்களினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பல பெண்களிடமிருது உண்மை வெளியே தெரியாதிருப்பதற்கு வெளிநாட்டு ராஜதந்திர பணிகளில்அவர்கள் அமர்த்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர் இந்த மூவரினதும் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றிய விபரங்களை பொதுமக்கள் தந்துதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.