செய்திகள்

இழுவை இயந்திரம் ஒன்று 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 3 பேர் வைத்தியசாலையில் (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்வரி தோட்டத்தில் இழுவை இயந்திரம் ஒன்று 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 3 பேர் படுங்காயம்பட்டு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டிக்கோயா இன்வரி தோட்ட தேயிலை மலையிலிருந்து தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்து பைகளை ஏற்றிச் சென்றபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு மேற்படி தோட்டத்தின் 6ஆம் இலக்க மலைப்பகுதியிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இழுவை வண்டியில் இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுங்காயம்பட்ட 3 பேரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC09880 DSC09881 DSC09882 DSC09883