செய்திகள்

இழுவை வண்டி விபத்து: மூவர் காயம்

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெளிஓயா கீழ்பிரிவு தோட்டத்திலிருந்து மேற்பிரிவுக்கு உரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த இழுவை வண்டி ஒன்று வெளிஓயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்து இன்று  காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இழுவை வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுங்காயம்பட்டவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஒருவர் வட்டவளை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

DSC09740 DSC09743