செய்திகள்

இஸ்லாமிய மயப்படுத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்

ஐரோப்பாவை இஸ்லாமியப்படுத்துவதற்கு ஆதரவாகவும்,எதிர்ப்பு தெரிவித்தும் ஜேர்மனி முழுவதிலும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமியமயப்படுத்தலிற்கு எதிரான தேசப்பற்றுள்ள ஐரோப்பியர்கள் என்ற அமைப்பு கடந்த வாரம் முழுவதும் ஜேர்மனியில் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.
திங்கட்கிழமை டிரெஸ்டன் என்ற பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20000 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதேவேளை பேர்லின் உட்பட பல இடங்களில் இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.பேர்லினில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5000 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஜேர்மன் சஞ்சிகையொன்று நடத்திய ஆய்வொன்றில் எட்டில் ஒருவர் தான் இஸ்லாமியமயப்படுத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளப்பபோவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இத்தகைய ஆர்ப்பாட்டங்களை ஜேர்மனியின் முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.