செய்திகள்

ஈராக்கில் ஐ.எஸ். தலைவர்கள் பலி?

ஈராக்கில் ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ (ஐ.எஸ்.) தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழியாகத் தாக்குதல் நடத்தியது. இதில் அந்தத் தீவிரவாத அமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

“இராக்கில் அன்பார் மாகாணத்தில் கெய்ம் எனும் நகரத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐ.எஸ்.அமைப்பைச் சேர்ந்த பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்” என்று ஈராக் நாட்டின் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் இந்த அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி, காயமடைந்தோ அல்லது கொல்லப்பட்டோ இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், கெய்ம் நகரத்தில் நடந்த ஐ.எஸ். கூட்டத்தில் அவர் பங்கேற்றார் எனும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.