செய்திகள்

உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் யுத்தநிறுத்தம் செய்ய மறுப்பு

கிழக்கு உக்ரைன் கிளர்ச்சி குழுவின் தலைவர் உக்ரைனுடன் யுத்தநிறுத்தம் செய்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.உக்ரைன், ஜேர்மனி, பிரான்ஸ்,ரஷ்யா ஆகிய நாடுகள் மோதல்களை நிறுத்துமாறு விடுத்த வேண்டுகோள்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனது போராளிகள் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த டொனெஸ்டெக் நகரத்தை கைப்பற்றியுள்ளதாகவும்,அப்பிராந்தியத்தின் எல்லைவரை தமது கட்டுப்பாட்டை உறுதிசெய்யும் வரை தற்போதைய தங்களின் தாக்குதல்கள் தொடரும் என கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்ஸாண்டர் ஜகர்சென்கோ தெரிவித்துள்ளார்.
தங்களது கிளர்ச்சிக்காரர்கள் எதிர்காலத்தில் எந்த வித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உக்ரைனிய படையினரின் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றம்சாட்டியுள்ளார்.