செய்திகள்

உக்ரைன் தொடர்பாக கெரி – புட்டின் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளனர்.

ரஷ்சியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் உக்ரைன் தொடர்பாக செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் உயர் அதிகாரிகளுடன் நேரடி தொடர்பை பேணுவதும்,அமெரிக்காவின் கருத்துக்கள் தெளிவாக ரஷ்யாவை சென்றடைவதை உறுதிசெய்வதுமே இந்த பெச்சுவார்த்தைகளின் நோக்கம் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொஸ்கோ கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதுடன் உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவை வழங்கிவருவதை தொடர்ந்து இரு அமெரிக்க – ரஷ்யா உறவுகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேற்குலகம் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பும் சிரியா குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளன.
கேரியின் விஜயத்தை உறுதிசெய்யதுள்ள ரஷ்யா எனினும் அவர் வெளிவிவகார அமைச்சரையே சந்திப்பார் என குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் திட்டமிடப்பட்ட சினேகபூர்வமற்ற நடவடிக்கைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.