செய்திகள்

உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஐ.தே.கவினர் பிரதமருக்கு கோரிக்கை :பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கையெடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் அமச்சர்கள் குழுவொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த  விடயம் தொடர்பாக அவதானம் செலுத்தி இதற்கான பதிலை விரைவில் வழங்குவதாக பிரதமர் அவர்களிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திகக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்கள் குழுவொன்று அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் இதன்படி பாராளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் நடந்துக்கொள்வதாகவும் இதனால் பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியினர் பிரதமரிடம் நேற்று மலை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால , பிரதமர் ரணில் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.