செய்திகள்

உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரிலுள்ள உணவு விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு, ஊழியர்களைக் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாவகச்சேரி நகரிலுள்ள உணவகம் ஒன்றினுள் நேற்றிரவு புகுந்த வாள் தாங்கிய குழுவினர் கடையைச் சேதப்படுத்தியதோடு, ஊழியர்கள் இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

சம்பவத்தில் ஊழியர்கள் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியதோடு சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்தனர்.

இன்று அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.