செய்திகள்

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது

எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சரே பொறுப்பு என குற்றம் சாட்டி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளார்.(15)