செய்திகள்

உதவி ஆசிரியர் நிரந்தர நியமன கடிதம் வழங்கல்

மத்திய மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நிரந்தர நியமன கடிதங்கள் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராம் தலைமையில் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது 619 உதவி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

DSC_0038 DSC_0052 DSC_0065