செய்திகள்

உத்தேச அரசியலமைப்பு திருத்தம் ஏப்ரல் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

உத்தேச புதிய அரசியலமைப்பு திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் சிறந்த தீர்வு திட்டங்களை உள்ளடக்கியதாக அமையும் என அவர் தெரிவித்தார்.

மாத்தளையில் இன்று நடந்த ஓர் மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.