செய்திகள்

உயிர்ப்பு!

 

நந்திக் கடற்கரையில்
சிந்திய குருதி நீர் …
செந்தீயாய் எழட்டுக்கும் !
அந்த மண்ணிலே மடிந்த எங்கள்
அக்கினிக் குஞ்சுகள் மீண்டும் உயிர்கட்டும் !

முந்தி எதிரியை புறமுதுகிடச் செய்து…
துஞ்சிய வீரரின் விழிகள் திறக்கட்டும் !
அந்தப் புறத்தில் இன்று கொஞ்சிக் கிடக்கும்
பகைவர்தலை அவர்களின் வாட்கள் அறுக்கட்டும் !

கந்தக பூமியில் அன்று களப்பலியிடப்பட்ட எம்
சொந்தங்கள் அமைதி அடையட்டும் – அவர்
சந்ததி வழிவந்த செந்தளிர்ப் பிஞ்சுகள்
புதிய சரித்திரம் படைக்கட்டும்!

சிங்க கொடி பற்றும் சிறுநரிக் கூட்டத்தின்
சந்தங்கள் இனி அடங்கட்டும்! -மீண்டும்
எங்கள் தாயகம் சுதந்திர பூமியாய்
என்றென்றும் சிரிக்கட்டும்!

– கொற்றவை