செய்திகள்

உறுதியளித்தது போல் தோட்ட தொழிலாளிகளுக்கு 7 பேர்ச் காணியுடன் வீடு அமைத்து கொடுத்துளோம் ( வீடியோ)

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் உறுதியளித்தது போல் தோட்ட தொழிலாளிகளுக்கு 7 பேர்ச் காணியுடன் வீடு அமைத்து காணி உறுதி பத்திரம் கொடுக்க முடிந்தது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தலவாக்கலையில் 10.05.2015 அன்று இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன் விழாவில் கலந்து கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.

 அவா் மேலும் இங்கு உரையாற்றுகையில்…

இந்த வீடமைப்பு திட்டம் இலகுவாக செய்வதற்கு அமைச்சர் திகாம்பரத்தின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரிய விடயம் எனவும் மலையகத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கவிருக்கும் வீடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்தின் மூலம் அமைக்கவிருக்கும் வீடுகளுக்கும் காணி உறுதி பத்திரம் வழங்கப்படும் எனவும் கடந்த அரசாங்கத்தில் இருந்தவா்கள் தோட்ட தொழிலாளா்களை ஏமாற்றியது போல் இந்த அரசாங்கம் ஏமாற்றப்பபோவதில்லை. வரும் தேர்தலின் பின் மலையக பகுதிக்கு விஞ்ஞான பாட ரீதியில் மலையகத்தில் கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயரத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் முன்னால் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது குடும்பத்துக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும்  செய்தது போல் இல்லாமல் இந்த அரசாங்கம் மைத்திரிபால சிரிசேன  தலைமையில் பெருமானளவில் சேவை செய்வதாக அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முதன்முறையாக காணி உறுதி பத்திரம் வழங்கியது அமைச்சர் திகாம்பரத்தின் உண்ணதனமான செயல்பாட்டினூடாகவே என அவர் மேலும் தெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=q8YxlYIKOLo&feature=youtu.be” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=IraiJfCUfE8&feature=youtu.be” width=”500″ height=”300″]