செய்திகள்

உளவியல் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலும் மருத்துவர்களின் பங்களிப்பும்

நீரிழிவு நோய் ஓர் தொழிலுடன் ஒப்பிடக் கூடியது. இது சாதாரண தொழில் புரிதல் போலன்றி மாறாக தினமும் 24 மணித்தியாலங்கள், வாரத்தில் எழு நாட்களும், வருடத்தில் 365 நாட்களும் ஒருவர் தொழிற்படுகின்றது. இந்நோய்க்கு விடுமுறையோ, தொழில் புகழ்ச்சியோ இல்லை.

நீரிழிவு நோயைக் கண்டறிந்து உறுதிப்படுத்துவது வாழ்வில் துயரமான அனுபவத்திற்கு ஒப்பானதாகும். (குப்ளர்-ரோஸ் மற்றும் கீள்சர், 2005) அன்பிற்குரிய ஒருவரின் இழப்பிற்கு வருந்துவது இயற்கையானது. அதேபோல் நீரிழிவு நோயைக் கண்டறிந்து உறுதிப்படுத்தும்போது ஒருவர் ஆரோக்கியத்தை இழந்துவிட்டார் என்பது வருத்தத்தை ஏற்பத்தலாம். சில காலங்களிற்கே வாழ்க்கையை வாழ்வதற்கான மனித உடற்தகுதியின் ஓர் அங்கமாக யாராலும் வெல்ல முடியாத அளவிற்கு நாம் ஆரோக்கியமாக உள்ளோம் எனக் கருதி எமது ஆரோக்கியத்தில் அல்லது நடத்தையில் அரிதாக அக்கறை காட்டுபவர்களாக இருப்போம். எவ்வாறாயினும் ஒருவரின் நீண்டகால உடல் ஆரோக்கிய நிலைப்பாட்டைக் கொண்டு நோயைக் கண்டுபிடிக்கும்போது அந்நபர் தன் வாழ்க்கையில் கட்டுப்பாட்டைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற அளவிற்கு இது அவரை வியத்தகுமுறையில் நன்கு எச்சரிக்கையுடையவராக மாற்றும்.

தற்போது அவர்கள் தங்கள் உடல்நிலையை நன்கு பேண தொடர்ச்சியாக மருந்தெடுத்துக் கொள்ளுதல், தமது வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டிருத்தல், தமது ஆரோக்கியத்தைப் பேண அடிக்கடி மருத்துவ நிலையம், வைத்தியர் குழு மற்றும் தாதியர்களிடம் சென்று தம்மைப் பரிசோதித்துக் கொள்ளுதல்; ஆகியவற்றில் தங்கியிருக்கவேண்டி உள்ளது.

குப்ளர்-ரோஸினால் (1997) முதலில் விபரிக்கப்பட்டது போன்று வேதனைக்குரிய படிநிலைகளை கட்டம் 1 கோடிட்டுக் காட்டுகின்றது. நீரிழிவு நோயுடைய ஒவ்வொரு நபரும் இவ் அனைத்து உணர்வு வெளிப்பாடுகளையோ அல்லது இக் குறிப்பிட்ட ஒழுங்கிலோ கட்டாயம் அனுபவித்திருப்பார்கள் என்றில்லை. நீண்டகாலமாக நீடித்திருக்கும் வேதனைக்குரிய செயல்முறைபோல் காணப்படும் நீரிழிவு நோயைக் கண்டுபிடிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் பல மக்கள் அதற்கு முன்பும் பின்பும் மறுப்புத் தெரிவிக்க முடியாமல் சங்கடப்படுதல், வாக்குவாதத்தில் ஈடுபடல், மற்றும் மனவருத்தம் ஆகியவற்றுக்கிடையே, இவற்றின் வழி சிறிதளவு ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய பல நிலைகளிடையே பல வருடங்களாக தடுமாறுகின்றவர்களாக காணப்படுவர். ஏனையவர்கள் ஒருபோதும் தமது நிலைமையை உண்மையில் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பார்கள். பொதுவாக அவர்களுடைய உண்மையான நோயைக் கண்டறிந்த சில வருடங்களின் பின் அவர்களுடைய அடையாளத்தோடு நோயை ஒருங்கிணைத்து அதிகளவில் ஒத்த தொடர்பினை வளர்ப்பதற்கு வைத்தியருடன் இணைந்து கொள்ளுமாறு தனிநபர்கள் தமது நீரிழிவு நோய் பற்றி அடிக்கடி தாம் கொண்டிருக்கும் சொல்லப்படாத உணர்வுகளை ஏற்றுக்கொள்ள உதவ முடியும்.

கட்டம் 1 : வேதனைக்குரிய நிலைகள் (குப்ளர்-ரோஸ், 1997)
நிலை 1 : மறுத்தல் – “இது நடந்திருக்க முடியாது”
நிலை 2 : கோபம் – “ஏன் எனக்கு?”,“இது நியாயமானதில்லை”, “இது எவ்வாறு எனக்கு ஏற்பட முடியும்?”, “யாரைப் பழி கூற முடியும்?”
நிலை 3 : வாக்குவாதம் செய்தல்- “இப்பொழுது தீரும் வர முன்பு நான் ஒன்றும் செய்யவில்லை”, “நான் ஏதாவது வித்தியாசமாக செய்திருந்தால் மாத்திரமே இது சாத்தியம்”
நிலை 4 : மன அழுத்தம் – “நான் மிகுந்த கவலையாக உள்ளேன்”, “இது என்ன நிலை?”, நான் என் பழைய வாழ்க்கையை இழந்ததாக உணர்கின்றேன்.
நிலை 5 : ஏற்றுக் கொள்ளுதல் –“இது சரியாகி விடும்”, “கட்டுப்பாட்டைப் பேணி என்னால் இதனைச் சமாளிக்க முடியும்.”

நீரிழிவு நோயை மறுத்தல்

எம் சுய உணர்விற்கு அப்பால் வைக்கப்பட்டுள்ள அதிகமாக நிலவுகின்ற அல்லது தீவிரமாகக் காணப்படும் ஒரு தனிநபரின் உள்ளாந்த மற்றும், வெளிப்புற உண்மைகளை ஏற்றுக் கொள்ளாது ஒரு தனிநபர் மறுப்புத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் மறுப்புத் தெரிவிப்பது ஒரு முதன்மையான பாதுகாப்பு பொறிமுறையாகும். தொடர்ந்து உயிர்வாழும் தொழிற்பாட்டிற்காக மனிதர்கள் வாழ்க்கையைச் சமாளிக்கும் ஒரு வழியாக மறுப்பு காணப்படுகின்றது. அதிகளவில் மறுப்புத் தொழிவிக்கப்படும் பட்சத்தில் அது கெடுதலாகிவிடும்.

Diabetes_Management_1

நீரிழிவு நோயுடையவர் அந்த வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளாமல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என இதனை விவரிக்க முடியும். நீரிழிவு நோயில், அதனை முகாமை செய்வதற்கான பல கூறுகள் காணப்படுகின்றன. அத்துடன் இரத்தத்திலுள்ள சக்கரையை பரிசோதிக்காமை, தகுந்த உணவை உட்கொள்ளாமை அல்லது முறையான உடற்பயிற்சியில்லாமை என்பவற்றை மறுப்புத் தெரிவித்தலின் சில உதாரணங்களாக உள்ளடக்க முடியும்.

தமது வாழ்வில் தாக்கத்தைச் செலுத்தும் நீரிழிவு தொடர்பாக குறைந்தளவு புரிதலைக் கொண்டிருத்தலே மறுப்பு ஆகும். மறுப்பின் உச்சக்கட்ட வடிவமாக தமக்கு நீரிழிவு நோய் இல்லையென மக்கள் கூறக்கூடும் என்பதுடன் வைத்தியர்கள் பொய்யுரைப்பதாகக் கூறுவர். “இது எனது குடும்பத்தில் எவருக்கும் வந்ததில்லை ஆகவே என்னிடமும் இந்நோய் இருக்க முடியாது” என்பது போன்ற ஒரு கதையை உருவாக்குவார்கள். உளவியல் அல்லது அறிந்து கொள்ள வேண்டிய நோய்களைப் பற்றிப் புரிந்து கொள்ளாத மக்களிற்கு இது கடினமானதாக அமையும். இவ்வாறான மக்கள் தமக்கு நீரிழிவு நோய் இல்லையென செல்லும் இடமெங்கும் கூறுவர். அவர்கள் எப்படியானவர்கள் என்பதைப் பொறுத்து, சாதாரணமாக முகம் கொடுக்க முடியாத சில உண்மைகளும் உண்டு. நீரிழிவு நோயால் மனச்சோர்வுடன் இருக்கும்போது தனிநபர்கள் தம்மிடம் (அவன் அல்லது அவள்) அந்நோய் இருக்கும் என அதிக எச்சரிக்கையாக இருக்கக்கூடும். அத்துடன் நோயின் எதிர்மறைத் தாக்கத்தில் கவனம் செலுத்துவர்.

முக்கிய விடயங்களில் ஒன்று என்னவெனில் ஆரம்பநிலையிலேயே நோயாளிகள் தமது உணவுப் பழக்கத்தை மாற்றமாட்டார்கள் அல்லது தம்மைப் பராமரித்துக்கொள்ள குருதி வெல்லத்தை அளவிடும் கருவியை ஒருபோதும் கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு வைத்தியராக, நீரிழிவு நோயையுடைய ஒருவர் முதன்முதலாக வரும்போது அவர் குருதியின் சக்கரை அளவைப் பரிசோதிக்க வைத்தியர் அவரைக் கேட்டுக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயின் உயிர்நாடியாக குருதி வெல்ல அளவு காணப்படுகின்றன. அத்துடன் நோயாளி அவரது வெல்ல அளவு தொடர்பாக எங்குள்ளார் என வைத்தியர் அறிந்து கொள்ளக் கூடியதாக குருதி வெல்லம் அளவிடும் கருவி உள்ளது.

சில தருணங்களில் மக்கள் தமது மீற்றர்களை வைத்திருக்க மாட்டார்கள் என்பதுடன் ஆகவே தான் அங்கே மறுப்பதற்கான சில நிலைகள் காணப்படுகின்றன. தமது வாழ்க்கை முறையை மாற்றாது தம்மால் தமது நீரிழிவு நோயை முகாமை செய்ய முடியும் என ஒரு நோயாளி கூறும்போது அது மறுப்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கும்.

அவர்கள் தமது அனைத்து வைத்தியருடனான சந்திப்புக்களையும் வைத்தியருடன் செலவிட்டால், தம்மைச் செய்யுமாறு வேண்டப்பற்றவற்றில் எதையும் செய்ய முடியாதபோது அல்லது தம்மால் செய்ய முடியாது எனக் கூறும்போதும் அதுவும் மறுப்பிற்கான மற்றுமொரு அறிகுறியாகும்.

தம்மை விட மிகவும் மோசமான நடத்தையை வெளிப்படுத்தும் நீரிழிவு நோயையுடைய குடும்ப அங்கத்தவர் அல்லது நண்பர் ஒருவரை எவ்வாறு தமக்குத் (அவன் அல்லது அவள்) தெரியும் என ஒரு நபர் குறிப்பிட்டால் அது மறுப்பிற்கான முக்கிய அறிகுறியாகும்.

Symptoms-of-diabetes

பரிசோதனை எனும் வார்த்தையின் அடிப்படையில் ஒரு அளவுகோல் காணப்படும். பொதுவான ஒட்டுமொத்த சுயமறுப்பு அளவுப் பரிசோதனையாக விரு;பத்தக்க பதிலுடைய சமச்சீரான இரும்பு அளவுகோல் உள்ளது. இது பல எதேச்சையான கேள்விகளினூடாக செல்வதுடன் நீங்கள் எவ்வாறு பதிலளிக்கின்றீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. இது ஒட்டுமொத்தமாக உங்கள் வாழ்வில் எவ்வளவு மறுப்புள்ளது என்பதைக் கணிப்பிடுகின்றது.

இப் பரிசோதனையை வழங்குநர்களால் நிர்வகிக்க முடியுமெனில் தமது உள்ளுணர்வுடன் ஒன்றித்துப் போவதற்கு எம்மால் வழங்குநர்களைச் சிபார்சு செய்ய முடியும். வழங்குநர் கேட்பதைப் பின்பற்றாத ஒரு நோயாளியை அவர்கள் கண்டால் அவரை உளவியல் நிபுணரை அணுகச் செய்வது நல்லதே. ஏனெனில் அவர்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுப்பதாக அங்கே ஏதேனுமொன்று உள்ளது. தன் மீது அக்கறை எடுத்துக்கொள்ள ஒரு நபர் தான் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடும்போது அங்கே ஏதேனுமொன்று தடைப்படுகின்றது.

அது எங்கிருந்து வருகின்றது என்பதைப் புரிந்ர்து கொள்வதிலுள்ள பிரச்சினைகளில் ஒன்று என்னவெனில் நீரிழிவு நோயாளிகள் நோயுற்றிருக்கும் போது தான் வைத்தியர்கள் பார்வையிட எத்தனிக்pகின்றனர். நீரிழிவு நோயையுடைய ஒருவர் வழங்குநர் அலுவலகத்திற்கு சக்கரை அதிகமாகக் காணப்படும்போதே செல்கின்றார். அத்துடன் அதுவரை அவர்கள் தமது நீரிழிவு நோய்பற்றி எதுவும் அறியாதவர்களாகவே உள்ளனர்.

அவர்கள் நுண்ணறிவார்ந்த முறையில் தகவலைத் தக்க வைத்துக்கொள்ள இயலாதவர்களாகக் காணப்படும் போதுதான் அவர்களிற்கு அது கூறப்படுகின்றது. அந்நபர் மறுப்புத் தெரிவிக்கும் நிலையில் இருக்கலாம் அல்லது அக் குறிப்பிட்ட நபரின் குருதியிலுள்ள வெல்லத்தின் அளவு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். இதனால் தான் அவர்களால் தகவலைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

தொடர்ந்துவரும் வைத்தியருடனான சந்திப்பில் “இதை நான் உங்களிற்கு கடந்த வாரமே கூறியிருந்தேன்” என வைத்தியர் கூறலாம். அவ்வாறு கூறியதும் நோயாளி அதனை மறுத்துப் பதிலுரைத்திருக்கலாம். எனவேதான் நோயாளியின் குருதியிலுள்ள வெல்லத்தின் அளவு அதிகமாகக் காணப்பட்டால் இத்தகவலை அவரால் உள்வாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும்.

பொதுவாக அவர்களின் நோய்க்கான அறிகுறிக்கு ஒரு நபரின் குருதியிலுள்ள வெல்லத்தின் அளவுதான் காரணமா அத்துடன் அவர்களின் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நோயாளியுடன் இணைந்து செயற்பட நேரத்தை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை ஓர் உளவியல் நிபுணர்கள் நோக்காது விடலாம். ஏற்றத்தாழ்வான அல்லது அசாதாரணமான குருதியிலுள்ள வெல்ல மட்டங்கள் நீரிழிவு நோயின் உணர்ச்சிகரமான நிலைக்கு மாற்றமடையும்போது பிரச்சினை வரும். இவை மனநோய்களுடன் மதிப்பிடப்படுகின்றன. அசாதாரணமாக குருதியிலுள்ள வெல்லத்தின் அளவிற்கான அறிகுறிகள் சில மனநலப் பிரச்சினைகளுடன் மிகவும் ஒத்த தன்மையாகக் காணப்படுகின்றன.

உண்மையான மறுப்பைத் தெரிவிக்காமைதான் செய்யக்கூடிய மிகச் சிறந்த வேலையாகும். தமக்கு நீரிழிவு நோய் உண்டு என்பதை அவர்கள் முகங்கொடுக்க விரும்பவில்லை. “உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகக் காணப்படும் பகுதிகள் எவை?” என அவர்களிடம் கேட்பதுதான் சிறந்த அணுகுமுறைகளில் ஒன்றாகும். நோயாளிகள் எதில் ஈடுபட விரும்புகின்றனர் என்பதை நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும்.

அவர்களுடைய ஆரோக்கியத்துடனும், நல்வாழ்வுடனும் தொடர்புடையதாக ஏதேனுமொன்று அங்கு வழமையாகவே இருக்கும். நோயாளி செயற்படும் ஏதேனும் ஒரு செயற்பாடுபோல் இது காணப்படக்கூடும். அத்துடன் அவனோ அவளோ இதில் ஈடுபடுவதுபோல், மெதுமெதுவாக மறுப்பு நீங்கிவிடும். அவர்களுடைய வாழ்க்கையின் மற்றைய பகுதிகளில் நீங்கள் இவற்றைச் செயற்படுத்தினால் நீரிழிவு நோய் அங்கம் வகிக்கத் தொடங்கிவிடும்.

ஆகவே நபர் ஒருவரிற்கு தனது எடையுடன் ஏதேனும் பிரச்சினையிருப்பின், உடற்பயிற்சி மற்றும் நன்றாக உணவருந்துதல் ஆகியன நீரிழிவு நோய் முகாமைத்துவத்தின் முன்றில் இரண்டு பங்காகும். எனவேதான் இழைவ எடைமுகாமைத்துவத்தினுள் உள்ளடங்குகின்றன. அவர்களை நீங்கள் எடை குறைக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனுப்பலாம். அத்துடன் அவர்களிற்குச் சில வகையான உடற்பயிற்சிகளையும் பரிந்துரைக்கலாம். இவ்வாறு பரிந்துரைப்பதால் அவர்களை அதிலிருந்து விடுபடச் செய்ய முடியும்.

TCdtrw7

நீரிழிவு நோயுடைய நபர் ஒருவர் உடற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்பதுடன் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் வேளையில் குருதி வெல்லக் குறைபாட்டைக் கொண்டிருப்பர். அப்பொழுது அந்நபர் வெல்லம் (சீனி) சேர்க்கப்பட்ட ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். எடைப் பிரச்சினையைத் தற்போது அவர்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால், தற்போது அவர்கள் ஒரு பிரச்சினையை வெற்றி கொள்ள வேண்டும். குறிப்பிட்ட அந்நபர் தனக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் சென்று குருதி வெல்லக் குறைபாட்டு நிகழ்வைப்பற்றி தெரிவிக்க வேண்டும்.

தற்போது யாரேனும் ஒருநபர் இப் பிரச்சினையுடன் வைத்தியரிடம் வரும்போது இந் நிலைமைக்கு அவன் அல்லது அவள் தன்னைச் சமாளித்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அத்துடன் சுயபாதுகாப்பிற்கான ஆரம்பமாக அது காணப்படுகின்றது.

இவ்வாறு தொடர்ந்தும் அந்நபர் உடற்பயிற்சியை மேற்கொண்டால் ஏற்படும் எதிர்வினைக்குப் போஷாக்கைத் தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவரிற்குத் தெரியும். அவர்கள் தமக்கு நீரிழிவு நோய் உண்டு என்ற உண்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சுயமுகாமைத்துவச் செயற்பாட்டை அந்நபர் ஆரம்பித்திருப்பார்.

1ம் வகை நீரிழிவு நோயுடைய யாரேனும் ஒருவர் உங்களிடம் இருக்கலாம். அத்துடன் அவர்கள் தமது குருதியில் உள்ள வெல்ல அளவை வழக்கமாகத் தொடர்ந்து பரிசோதித்தவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள், அவர்களிடம் உறவுமுறைப் பிரச்சினையுண்டு என்பதைக் கண்டுபிடித்திருப்பீர்கள். நீங்கள் மற்றொரு பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கின்றீர்கள். ஒருமுறை உங்களால் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடிந்தால் மற்றைய பிரச்சினை வெளிப்பட்டு விடும்.

தாம் மறுதலிக்கும் மனநிலையில் உள்ளதை ஒரு நபர் ஒருபோதும் உணரமாட்டார். அதிலிருந்து அவர்களை விடுபடச் செய்வது வைத்தியரின் கடமையாகும். மேலும் அவர் அதை மறுக்கின்றா என யாரிடமாவது கூறினால் அது அந்நபரை “நான் மறுக்கவில்லை” எனக் கூறச் செய்யும். நோயாளிகள்p கேட்க விரும்பாத விடயங்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலதிக நேரத்தில், மருத்துவர்கள் ஏனைய பிரச்சினைகளில் ஈடுபட்டு நீரிழிவு நோயை வழிப்படுத்தும்போது, நீரிழிவு நோயால் ஏற்படும் பிரச்சினைகளினூடாக அவர்கள் செல்வார்கள். அது அந்நபரை தனது நீரிழிவு நோயில் அக்கறை எடுத்துக்கொள்ள அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.

இது ஒரு சீரான செய்முறையாகும். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனத் தமது நோயாளிகளிடம் கூறும் வைத்தியர்களும் உண்டு. தம் நோயாளிகளில் அக்கறை எடுத்துக் கொள்ளவே இதனை அவ் வைத்தியர்கள் மேற்கொள்கின்றனர். தமது சொந்த அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள நீங்கள் உங்கள் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். அத்துடன் அவர்கள் மறுக்கின்ற மனநிலையில் காணப்படால் தமக்கு நோய் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாரில்லை என்பதே இதன் பொருளாகும்.

ஆபத்தான மருத்துவ நிலைகளில் ஒன்று என்னவெனில் அவர்களின் குருதி உள்ள வெல்லத்தின் அளவு குறைவாக அல்லது அதிகமாகக் காணப்பட்டால் அது வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்படல் வேண்டும். அவர் தொடர்ந்தும் மறுத்துக் கொண்டிருக்க நீங்கள் அங்கிருந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவர் இன்னும் முன்பைவிட அதிகமாக மறுதலிப்பார். அத்துடன் அவர்களின் பாதுகாப்பு தீவிரமடைந்து அது அவர்களைத் தொடர்ந்தும் வைத்தியசாலையில் இருக்கச் செய்துவிடும். எவ்வாறாயினும், அவர்களுடன் மெல்ல கவனத்துடன் செயற்பட்டால் இம் மக்கள் “எனக்கு பிரச்சினை ஒன்றுள்ளது” எனத் தாமாகவே கூறவிளைவர்.

நோயை உணர்ந்துகொள்ள நீங்கள் அவர்களை கட்டாயப்படுத்த எத்தனித்தால் இது எதிரான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இது மாறுவதற்குக் குறிப்பிட்ட காலம் எடுக்கும். அத்துடன் அதனூடே நீங்கள் அவர்களிற்கு வழிகாட்டுதலை வழங்க வேண்டி ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகளில்
35 – 75மூ நோயாளிகள்p கட்டுப்பாடான உணவை உண்பதில்லை.
தவறான முறையில் இன்சுலின் மருந்தினை ஏற்றுவதில் 20 – 80மூ மான வகை ஐ சலரோக நோயாளிகள் காணப்படுகின்றனர்.
30-70மூ நோயாளிகள் குருதி வெல்லச் சோதனைகளைச் சரியாகச் செய்வதில்லை.
23 – 52மூ நோயாளிகள் பாதங்களைச் சீராகக் கவனிப்பதில்லை.
70 – 81மூ நோயாளிகள் போதிய உடற்பயிற்சி செய்வதில்லை.

எனவே உளவளத்துணை நீரிழிவு நோயாளிகளில் நோய்ப் பராமரிப்பு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

செல்வி. S. செலினா (மருத்துவ மொழி பெயர்ப்புத்துறை மாணவி, கலைப்பீடம், யாழ். பல்கலைக்கழகம்)