செய்திகள்

உள்நாட்டு விசாரணைக்கு மைத்திரிபால முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்

ஜெனீவாவின் மனித உரிமை நடைமுறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் புதிய அணுகுமுறையை கையாளும் என இலங்கைவெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீரதெரிவித்துள்ளார்.
யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைசெய்வதற்கு நாங்கள் உள்நாட்டுபொறிமுறையொன்றை பயன்படுத்துவோம்,அதற்கு சர்வதேச அமைப்புகள் ஆதரவு வழங்கும் என்றும் அவர் இந்தியாவில் கருத்துதெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது சிலநாட்கள் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி இராணுவத்தின் நடவடிக்கைளிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்வாரா என்ற கேள்விக்கு உள்நாட்டு விசாரணைகளுக்கு புதிய ஜனாதிபதி முழுமையான ஓத்துழைப்பை வழங்குவார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு கோரிக்கைகளை புதிய அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,பொதுமக்களுடைய காணிகளை இராணுவம் பயன்படுத்தும் விடயம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது,எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணைகளை நிராகரித்துள்ள அவர்,முன்னைய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளே இலங்கை குறித்த சீற்றமான மனோநிலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.