செய்திகள்

உள்நாட்டு விசாரணையை துரிதமாக ஆரம்பியுங்கள்: ரணிலை வலியுறுத்திய பெல்டமன்

போர்க் குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணையை துரிதமாக மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான 4 நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த பெல்டமன், நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அலரி மாளிகையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பரஸ்பரம் கரிசனை கொண்டுள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, தனது இலங்கை விஜயத்தின் போது போது, கண்டறிந்த விடயங்களை உள்ளடக்கியதாக இந்தச் சந்திப்பில், ஐ.நாவின் நிலைப்பாட்டை பிரதமரிடம் ஜெப்ரி பெல்ட்மன் எடுத்துக் கூறியுள்ளார்.

உள்நாட்டு விசாரணையை மிகவிரைவாக மேற்கொள்ளுமாறும், குறுகிய காலத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.