செய்திகள்

உள்ளக விசாரணை பற்றி கருத்துக்கூற விஜயதாசவுக்கு உரிமையில்லை: ராஜித சொல்கிறார்

யுத்தக் குற்­றச்­சாட்டு குறித்த உள்­ளக விசா­ர­ணைகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டுவ­தற்கு நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­ப­க் ஷ­வுக்கு எந்த உரி­மையும் இல்லை என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித்த சேனா­ரட்ன தெரி­வித்தார். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வுக்கே இது தொடர்பில் கருத்து வெளி­யிடும் உரிமை உள்­ளது என்றும் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநா ட்டில் கலந்­து­கொண்ட அமைச்­ச­ரிடம் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி னார்.

யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அர­சாங்கம் விசா­ரணை நடத்­தாது என்று நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ கூறி­யு ள்­ளமை தொடர்பில் உங்கள் கருத்து என்­ன­வென்று கேள்வி எழுப்­பப்­பட்­டது. இதறற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித  இதனைத் தெரிவித்தார்.