செய்திகள்

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடக்கும்

ஆயுட்காலம் முடிவடைந்து நேற்று நள்ளிரவுடன் கலைந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒருவருட காலத்துக்குள் நடத்தபட வேண்டுமென பொது நிர்வாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரவித்துள்ளது.

குறித்த தேர்தலை தொகுதிவாரி முறைமையில் நடத்த தீர்மானித்துள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் தெரவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுடன் 234 உள்ளுராட்சி சபைகள் ஆயுட்காலம் முடிந்து கலைந்துள்ளதுடன் அதன் செயற்பாடுகள் விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.