செய்திகள்

உழைப்பாளர் தினத்தில் யாழ்.ஏழாலையில் இளைஞர்களும் யுவதிகளும் ஆர்வத்துடன் குருதிக் கொடை

உழைப்பாளர் தினமான கடந்த 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நடாத்திய குருதிக் கொடை நிகழ்வு யாழ்.ஏழாலை மேற்கு சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

காலை 09 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்படி அமைப்பின் தலைவர் வே.மயூரன் தலைமையில் இடம்பெற்ற குருதிக் கொடை நிகழ்வில் 42 வரையான இளைஞர்களும்,யுவதிகள் சிலரும் குருதிக் கொடை வழங்கியதாக இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி எம்.பிரதீபன் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக யாழ்.மாவட்டத்தில் இளைஞர்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு சுமத்து வரப்படும் நிலையில் இளைஞர்கள் தாமாக முன்வந்து உழைப்பாளர் தினத்தில் குருதிக் கொடை வழங்கியமை முன்னுதாரணமான செயற்பாடெனப் பலரும் பாராட்டியுள்ளனர். யாழ்.நகர் நிருபர்-

DSCN0162 DSCN2625 (1) IMG_2678 IMG_2701 IMG_2703