செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கென வீட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை : ஹோமாகமையில் வீடுகள் அமையும்

ஊடகவியலாளர்களுக்கென  வீட்டுத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஹோமாகம தியகம பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய 1500 வீடுகள்அடங்கிய வீட்டுத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக இன்று முதல் காணி  அளவீட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருனாதிலக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த காணியை பார்வையிட்டுள்ள அமைச்சர்  காணி அளவீட்டு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் வாரமளவில் வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை முறையாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இதன்படி குறித்த வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.