செய்திகள்

ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டமை நிருபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்டும்: பாதுகாப்பமைச்சர்

புதிய அரசாங்கத்துக்கு பழிவாங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் ஆனால் , எவராவது ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாபப்மைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்திருக்கிறார்.

மிதக்கும் ஆயுத கப்பல் மற்றும் பி.எம். ஐ. சி. எச் இல் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் பற்றிய அறிக்கைகள் விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்கப்படும் என்றும் அவர் இன்று ஊடகவியலாளர்களிடம் அத்திடியவில் தெரிவித்தார்.