செய்திகள்

ஊழல் மோசடி விசாரணைக்கு இடையூறாக அறிக்கைகளை வெளியிட வேண்டாம் நிதியமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல்

நல்லாட்சிக்குப் பங்கம் ஏற்படக் கூடிய விதத்திலோ, ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு தடை ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிடவேண்டாமென நீதியமைச்சருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரின் வெளிநாட்டுக் கடவுச் சீட்டு தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பிரதமரை சந்தித்து தெளிவுபடுத்தியதைடுத்து பிரதமர் நீதியமைச்சரை அழைத்து இது குறித்து கலந்துறையாடியுள்ளார்.

நேர்மையான அரசியல் கலாசாரத்தை நாட்டில் உருவாக்கும் பொருட்டு பாடுபடும் அனைவரதும் எதிர்பார்பு ஊழல், மோசடிகளை முற்றாக ஒழித்தக்கட்டுவதும் அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களைச ட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதுமேயாகும் என இங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே நல்லாட்சியைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கும் தடை ஏற்படும் விதத்தில் செயற்படவோ அறிக்கைகளை வெளியிடுவதையோ தவிர்த்துக் கொள்ளுமாறு பிரதாமர் இங்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேவேளை அவன்கார்ட் குறித்த விசாரணையை சுயாதீனமாகவும் பக்கச் சார்பின்றியும் முன்னெடுக்குமாறும் சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பதால் அதற்குப் பொறுப்பானவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பிரதமரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.