செய்திகள்

ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

ஊவா மாகாணத்தில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்க கோரி ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் 15.06.2015 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி பதுளை பஸ் தரிப்பிடத்திலிருந்து ஊவா மாகாண சபை வரை ஊர்வலமாக சென்று அதன்பின் ஊவா மாகாண சபைக்கு முன்பு சுமார் 3 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்புடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது 150ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.   ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு உடனடியாக தொழில் வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

3 மணி நேரத்தின் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடதக்கது.

IMG-20150616-WA0007 IMG-20150616-WA0008