செய்திகள்

எகிப்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் 12 பேர் பலி

எகிப்தின் சினாய்பகுதியில் இடம்பெற்ற இருவேறு குண்டுவெடிப்புச்சம்பவங்களில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ்நிலையமொன்றிற்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் நிலையமொன்றிற்கு முன்னாள் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் அந்த பகுதியே அதிர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இதன் பின்னர் ஷேக்சுவைட் நகரப்பகுதியில்இராணுவாகனமொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன்,இருவர் காயமடைந்துள்ளனர்.
சினாய் தீவிரவாதிகள் தாங்களே இந்ததாக்குதலை மேற்கொண்டதாக அறிவித்துள்ளனர்.