செய்திகள்

எகிப்தில் பாரிய ஆர்பாட்டங்கள் தொடர்கின்றன, 18 பேர் பலி

எகிப்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்று பொலிஸாரும் இதன்போது கொல்லப்பட்டுள்ளதுடன் பல பொதுமக்கள் காயமடைந்து;ள்ளனர். வெடிகுண்டை வெடிக்க வைக்கமுயன்ற மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார் 400 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தலைநகர் கெய்ரோவில் சனிக்கிழமை எதிரணி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து தீவிரமடைந்துள்ள ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
எகிப்தின் ஹொஸ்னி முபாராக் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட நான்காவது வருடத்தை குறிக்குமுகமாகவும் ஆர்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.எகிப்தின் பல நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் . தலைநகரில் முக்கிய கட்டிடங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே நாட்களில் இடம்பெற்ற ஆர்ப்பாடங்களின் போது பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.