செய்திகள்

எகிப்தில் ராணுவத்தை குறிவைத்து தீவிரவாதிகள் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்: 60 வீரர்கள் பலி

எகிப்து நாட்டின் வடகிழக்கு பகுதியான வடக்கு சினாயில் உள்ள 5 ராணுவ சோதனை சாவடிகளை குறிவைத்து ஒரே நேரத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை மற்றும் பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 60 மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ராணுவனத்திரும், போலீசாரும் தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் தரப்பில் 22 பேர் பலியானதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எகிப்து அதிபர் அப்தேல்- பத்தா- எல் சிஸ்சி தீவிரவாதிகளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் கூறியதையடுத்து தீவிரவாதிகள் இந்த தாக்குலை அரங்கேற்றியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன் எகிப்து அரசின் தலைமை வழக்கறிஞர் ஹிஷாம் பாரகாத் கார் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013-ல் எகிப்தில் முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி பதவியில் இருந்து வெளியேறியதற்கு பிறகில் இருந்து அங்கு போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படைவீரர்கள் பலியாகியுள்ளனர்.