செய்திகள்

எகிப்து முன்னாள் ஜனாதிபதி மோர்சிக்கு மரண தண்டனை

எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி முகமது மோர்சிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
2011ம் ஆண்டு சிறைக்கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.மோர்சி தனது ஆட்சியின்போது போராட்டக்காரர்களை கைது செய்து துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி மோர்சி. முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு ஜனாதிபதி பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

எகிப்தின் ராணுவத தலைவராக இருந்த அப்டெல் சிசி மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவருடன் அவருக்குத் துணை புரிந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்நோக்கி காவலில் உள்ளனர்.மோர்சியின் ஆதரவாளர்கள் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மோர்சிக்கும் இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.