செய்திகள்

எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் சுற்றாடலுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது – இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் கடற்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிபுணர்கள் தொடர்ச்சியாக கடற்கரையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கடற்பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் சுற்றாடலுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கப்பலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கணக்கிட்டு அதிலிருந்து மீள்வதற்கும் சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய பேரழிவை தடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உதவும் என சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹேனா சிங்கர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.(15)