செய்திகள்

எங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவர் தோனி: ரஹானே

எங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவர் தோனி என இந்திய அணியின் முன்னனி துடுப்பாட்ட வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

முன்னாள் டெஸ்ட் அணிதலைவர் மகேந்திர சிங் தோனி பற்றி ரஹானே கூறும் போது ”இளைஞர்கள் ஆன நாங்கள் தோனியிடம் நிறைய கற்றுக் கொண்டோம். முக்கியமாக அவர் எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி அல்லது 20 ஓவர் போட்டி என அனைத்து போட்டிகளிலும் எப்படி ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றால் போல் செயலாற்ற வேண்டும் என கற்றுக்கொடுத்தார்.

இனி அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விட்டாலும் ஒரு நாள் போட்டிகளில் அவரின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சியான விஷயம் என ரஹானே” தெரிவித்துள்ளார்.
;