செய்திகள்

எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெற்றிப்பெறாது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெற்றியளிக்காத நிலைமையே காணப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20வது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்ட பின்னர் அது  நிறைவேற்றப்பட்டவுடனோ அல்லது தோல்வியடைந்தாலோ உடனடியாக பாராளுமன்றத்த கலைக்கும் திட்டமே அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.
இந்நிலையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை எந்தவொரு நம்பிக்கையில்லா பிரேரணையும் விவாதத்திற்கு வராது என அண்மையில் அமைச்சரவை பேச்சாளரும் தெரிவித்திருந்தார். இதன்படி எதிர்க் கட்சியின் குறித்த நம்பிக்கையில்லா பிரேணைகளும் செல்லுபடியற்றதாகிவிடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.