செய்திகள்

எதிரணியுடன் சொற்போரில் ஈடுபடுவது கிரிக்கெட்டிற்கு நல்லது

எதிரணியினருடன் சொற்போரில் ஈடுபடுவதை நியாயப்படுத்தியுள்ள இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜிம்மி அன்டர்சன் அது நியாயமான தந்திரோபாயம், கிரிக்கெட்டிற்கு நல்லவிடயம் என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான சொற்போரில் எதிரணியுடன் ஈடுபடுவது கிரிக்கெட்டிற்கு சிறந்த விடயம்,ஆனாஅதனை ஓரு வித புத்திசாலித்தனத்துடன் செய்யவேண்டும், எல்லை தாண்டக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமராக்கள், மைக்ரபோன்கள் இருக்கின்றன, எல்லை தாண்டினால் நாங்கள் தண்டிக்கப்படலாம் என்பது எங்களுக்கு தெரியும்,எனினும் அது கிரிக்கெட்டின் ஒரு பகுதி,நூறு வருடங்களாக காணப்படும் ஒரு விடயம் மறையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அது கிரிக்கெட்டிலிருந்து காணமற்போகக்கூடாது, புத்திசாலித்தனத்துடன் கையாண்டால் அதுவும் ஓருவித சுவாரஸ்யமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆசஸ் தொடரில் பிரிஸ்பேன் டெஸ்டில் ஆன்டர்சன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய வேனை கையை முறித்துக்கொள்வதற்கு தயாராகயிரு என மைக்கல்கிளார்க் மிரட்டியமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் ஆன்டர்சன் ஜடேஜாவுடன் சொற்போரில் ஈடுபட்டு பலத்த சர்ச்சையைஉருவாக்கியிருந்தார்.