செய்திகள்

எதிர்க்கட்சிக்கு லாபம் அரசாங்கத்துக்கு கஷ்டம்

20ஆவது திருத்தம் எதிர்க்கட்சிக்கு லாபம் எனவும் அரசாங்கத்துக்கு கஷ்டமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஐக்கியதேசியக்கட்சி கூறுவதை ஏற்கமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று அபேராமையில் மஹிந்த ராஜபக்சவை உள்ளூராட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார். அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இன்றும் பார்வையாளர் தான் அதனாலேயே மாத்தறை கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொண்டேன் இதுதவிர வேறுஒரு காரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.