செய்திகள்

எதிர்வரும் காலங்களில் மக்கள் எதிர்பார்க்கும் நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்குமாம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (படங்கள்)

75 வருட காலமாக மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் காலங்களில் மக்கள் எதிர்பார்க்கும் நியாயமான சம்பள உயர்வை பெற்று கொடுக்கும்.

வெறுமனே எம்மை விமர்சிப்பதை தவிர்த்துக் கொண்டு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றாது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப். காரியாலயத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர் தலைவிமார்கள், மற்றும் கட்சி அமைப்பபாளர்களுக்கிடையில் 21.05.2015 அன்று இடம் பெற்ற சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் பாராளுமன்ற பிரதேச சபை தேர்தல்கள் தொடர்பில் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான எம். ரமேஷ் பி. சக்திவேல், பிலிப்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

000-1

DSC_0219

DSC_0222

DSC_0226

DSC_0228

DSC_0283

DSC_0318

DSC_0331

DSC_0335

DSC_0336

DSC_0337