செய்திகள்

எதிர்வரும் 29 ல் மினி பட்ஜெட்: அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

புதிய அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்துக்கான சிறிய வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தில் உறுதியளித்தபடி பொதுமக்களுக்கான பல்வேறு நிவாரண திட்டங்கள் இந்த வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் அதேவேளை தனியார் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கான பொறிமுறை ஒன்றும் உள்ளடக்கப்படுவதாகவும் அவர் கூறினார். எரிபொருள் உட்பட 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் ரவி கருணாநாயக்க அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போது தெரிவித்தார்.