செய்திகள்

எந்தவேளையும் எனது அரசியல் மீள் பிரவேசம் நிகழலாம்: நடிகர் வடிவேலு

சினிமாவில் மீண்டும் தீவிரமாக நடித்து வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தான் எந்த நேரத்திலும் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கலாம் என்று கூறியுள்ளார். தெனாலிராமனுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள ‘எலி’ படக் குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை கிரீன் பார்க்கில் நடந்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆனால், எந்த கட்சி மூலம் தனது அரசியல் மீள் பிரவேசம் இடம்பெறும் என்பது போன்ற தகவல் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.