செய்திகள்

எனது அணியே மிகச்சிறந்தது – டிவிலியர்ஸ்

2015 உலககிண்ணப்போட்டிகளில் இதுவரை தனது அணியே மிகச்சிறந்த அணியென தென்னாபிரிக்க அணிதலைவர் ஏ.பி டிபிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.
எங்கள் அணியே 100 வீதம் தலைசிறந்த அணி என நான் கருதுகிறேன்,முதல் சுற்றில் நாங்கள் சந்தித்த இரு தோல்விகள் எங்களை காயப்படுத்தியது உண்மை,எனினும் அது முடிவடைந்துவிட்டது,அந்த போட்டிகளையும் எங்களால் வென்றிருக்க முடியும், நாங்கள் வெற்றிக்கு தொலைவிலிருக்கவில்லை என்பதும் எங்களுக்கு தெரியும், உலக கிண்ணத்தை தென்னாபிரிக்காவிற்கு கொண்டுசெல்வதற்கு இன்னமும் மூன்று போட்டிகளே உள்ளன என்பதும் எங்களுக்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி இலக்குகளை எட்டுவதற்கு அணி சிரமப்படுகின்றதா என்ற கேள்விக்கு டிவில்லியர்ஸ் அது ஓரு பிரச்சினையில்லை , எங்களால் எந்த இலக்கையும் அடைய முடியும்,அதற்கு விசேட தந்திரோபாயங்கள் எதுவும் அவசியமில்லை.அடிப்படைகளை சிறப்பாக செய்யவேண்டும்,கடந்த வருடம் அழுத்தமான நிலைகளில் நாங்கள் அதனை செய்துள்ளோம்,எனினும் கடந்த சில போட்டிகளில் அது எமக்கு சரிவரவில்லை.எங்களது துடுப்பாட்ட வரிசையில் எனக்கு நம்பிக்கையுள்ளது,சிலர் இன்னும் ஓட்டங்களை பெறத்தொடங்கவில்லை என்பது தெரியும்,அது விரைவில் நடக்கும் என்பதும் எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.