செய்திகள்

எனது குடும்பம் செய்த தவறுதான் என்ன? கேள்வியெழுப்பும் மஹிந்த

தமது குடும்பத்தார் செய்த தவறுதான் என்ன ஏன் எங்களை இப்படி பழிவாங்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று மாத்தளை புறுக்கல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது தனது சகோதரான பஸில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ள விடயம் மற்றும் மற்றைய சகோதரரான கோதாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் என்னையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் தண்டிக்க முயற்சிக்கின்றது. நாங்கள் செய்த தவறுதான் என்ன? ஏன் எங்களை இப்படி பழிவாங்க வேண்டும். என கேள்வியெழுப்பியுள்ளார்.