செய்திகள்

எனது பெற்றோர் ஶ்ரீ.ல.சு.கவை சேர்ந்தவர்கள் அல்ல ஐ.தே.கவை சேர்ந்தவர்கள் : ஜனாதிபதி மைத்திரி

தான் பரம்பரை வழியில் வந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரன் அல்லவெனவும தனது பெற்றோர் ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  பொலநறுவையில் நடைபெற்ற மாவட்ட கட்சி அங்கத்தவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டனர் அவர்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை விரும்பினர். இதன்படி ஶ்ரீமாவே பண்டாரநாயக்க எதற்காக முயற்சித்தார்களோ அதனை தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். நான் பரம்பரை வழியில் வந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரன் இல்லை எனது பெற்றோர் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள்.

இதேவேளை யாருடனும் எனக்கு தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலும் கிடையாது. அவ்வாறு எந்தவொரு நபரினதும் தனிப்பட்ட பிரச்சினைக்காகவும் முன்நிற்கப் போவதில்லை. மக்கள் பிரச்சினை எதுவோ அதனை தீர்ப்பதற்கே முன்நிற்பேன். என அவர் தெரிவித்துள்ளார்.