செய்திகள்

எமது நிலைப்பாட்டை கேட்க முன்னர் ஶ்ரீ.ல.சு.க தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் : அஜித் பி பெரேரா

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை கேட்பதற்கு முன்னர் அது தொடர்பாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதனை அறிவிக்க வேண்டுமென வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் தொடர்பாக நாங்கள் எமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கையில் ஶ்ரீ லங்கா சுசதந்திரக் கட்சியினர் எமது நிலைப்பாட்ட அறிவிக்க வேண்டுமென கூறுகின்றனர். அதற்கு முன்னர் அவர்கள் என்ன நிலைலப்பாட்டில் இருக்கின்றனர். என்பதனை அறிவிக்க வேண்டும். என கேட்டுக்கொள்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.