செய்திகள்

எம்பி பதவி கேட்டு ஹக்கீம் மீது பாய்ந்த நபர்

சம்மாந்துறையில் நேற்று இரவு  இடம்பெற்ற இப்தார் நிகழ்வு ஒன்றில் சுவாரசியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

மு.கா தலைவர் ரவுவ் ஹக்கீம்,கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் மன்சூர்,நிகழ்வு ஏற்பாட்டாளரும் கட்சியின் அதி உயர்பீட உறுப்பினருமான மாஹீர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் அதில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றி ஹக்கீம் உரையாற்றினார்.

அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்து ஹக்கீம் வெளியேற முற்பட்டவேளை,திடீரென எழுந்த ஒரு நபர் ”சேர்! சம்மாந்துறைக்கு எம்பி ஒருவரைத் தருவீர்களா,இல்லையா?” என்று ஆக்ரோசமாகக் கேட்டார்.

ஹக்கீம் அவரது வழமையான பாணியில் சிரித்துக்கொண்டு இருந்தார்.ஆனால்,அந்த நபர் மேலும் ஆக்ரோசமானார். இதனால் கட்சி ஆதரவாளர்கள் அந்நபரைத் தடுத்து ஹக்கீமைச் சுற்றி வளைத்து -பாதுகாப்பு வழங்கி அப்படியே அழைத்துக்கொண்டு சென்றனர்.