செய்திகள்

எம்.பிக்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி : இன்று இரவு வர்த்தமானியில் வெளியாகும்

எம்.பிக்களின் எண்ணிக்கையை 237 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் 20வது திருத்தம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இது வரை காணப்பட்ட 225 என்ற உறுப்பினர் எண்ணிக்கையை 12 உறுப்பினர்களால்அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொகுதி ரீதியில் 145 உறுப்பினர்களும் விகிதாசாரம் மற்றும் தேசிய பட்டியல் ரீதியில் மற்றைய உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை அமைச்சரவை அனுமதியை பெற்றுள்ள 20வது திருத்தம் இன்று இரவு வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.