செய்திகள்

‘எரிபொருள் விலைகளை அதிகரிக்க நேரிடும்’: கம்மன்பில

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமையில், நிதி அமைச்சிடமிருந்து எதிர்பார்க்கும் சலுகை கிடைக்காவிட்டால் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே லங்கா ஐஒசி நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோலை 15 ரூபாவாலும் டீசலை 25 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் பெட்ரோலிய கூட்டுத்தாபனமும் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
-(3)