செய்திகள்

எரிபொருள் விலையை அதிகரிக்க விட மாட்டோம் : நிதி அமைச்சர்

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதன் விலைகளை குறைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் விலையை மேலும் குறைத்திருக்க முடியும்.  எவ்வாறாயினும் எரிபொருளின் விலைகளை குறைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.