செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வழங்கியுள்ள விளக்கம்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒரு பிரதான காரணியாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை கூறியுள்ளது.

நாட்டில் வங்கிக் கட்டமைப்பை பலப்படுத்தி வட்டி விகிதத்தை முறையாக பேணுவதற்கும், அந்நிய செலாவணியை பாதுகாக்கவும் மற்றும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், அது குறித்து ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் பங்கேற்பில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழுவில் அவதானம் செலுத்தப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
-(3)