செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று போராட்டத்தை நடத்தினர்.

தமது இருப்பிடங்களில் இருந்து பாராளுமன்றம் வரையில் தமது வாகனங்களில் பயணிக்காது உழவு இயந்திரங்கள், லொறிகள், ஆட்டோக்களில் அவர்கள் பயணித்தனர்.

பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையில் குறித்த வாகனங்களில் சென்ற அவர்கள். அங்கிருந்து பாராளுமன்ற நுழைவாயில் வரையில் நடந்து சென்றனர்.
-(3)