செய்திகள்

எறிகணைதாக்குதலில் உக்ரைனில் 15 பொதுமக்கள் பலி

உக்ரைன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மரியுபோல் துறைமுக நகரின் மீது ரஷ்ய சார்பு கிளர்ச்சிக்காரர்கள் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பிட்ட நகரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சந்தையொன்றின் மீது எறிகணைகள் விழுந்துவெடித்தில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.
பலகார்களும்,வாகனங்களும், வீடுகளும் தாக்குதலுக்குள்ளாகி தீப்பற்றி எரிவதை வீடியோவொன்றில் காணமுடிகின்றது.
பல்குழல் எறிகணைதாக்குதலே மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

எனினும் கிளர்ச்சிக்காரர்கள் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என நிராகரித்துள்ளனர்.

500.000ற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இந்தநகரம் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கும்,ரஷ்யாவால் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட கிரிமியாவிற்கும் நடுவிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம் ஆகஸட் மாதம் இந்த நகரில் கடும்மோதல்கள் இடம்பெற்றிருந்தன,இந்த நகரத்தை மையமாக கொண்டு மோதல்கள் மூண்டால் உக்ரைனிய கிளர்ச்சிக்காரர்களுக்கும்,அரசபடையினருக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையலாம் என சுட்டிக்காட்டப்பட்டு;ள்ளது.