செய்திகள்

எழுவைதீவு கடற்கரை வீதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

எழுவைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை வீதியினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளித்தார்.

எழுவைதீவிற்கு நேற்றைய தினம் (13) விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் குறித்த வீதியினை திறந்து வைத்தார்.

எழுவைதீவு இறங்குதுறையிலிருந்து மக்களின் குடிமனைக்கு செல்லும் இக் கடற்கரை வீதியானது நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் இருந்து வந்தது.

இந்நிலையில், குறித்த வீதியினை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் புனரமைப்புச் செய்து தருமாறு மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக செயலாளர் நாயகம் அவர்களது வழிகாட்டலுக்கு அமைவாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 6.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

00இதனிடையே தமது கோரிக்கைக்கு அமைவாக உரிய நடவடிக்கையினை முன்னெடுத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன்யோகநாயகம், ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன், உபதவிசாளர் அல்பேட், பிரதேச சபை செயலாளர் சுதர்ஜன், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.